ADVERTISEMENT

கல்லனை கால்வாய் கரை பாதுகாப்பை டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆய்வு செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

12:13 AM Aug 15, 2018 | bagathsingh

ADVERTISEMENT

கல்லனை பாசன கண்காணிப்புக் குழு தலைவர் அருண் மேற்பனைக்காடு பகுதியில் ஆறு, ஆற்றுக்கரைகளை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு 3 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறந்தால் பாதிப்பு இருக்காது என்றார்.

ADVERTISEMENT

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லனை வந்தடையும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் கல்லனையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லனை திறக்கப்பட்ட சில நாட்களில் தஞ்சாவூர் அருகில் உள்ள கல்விராயன்பேட்டையில் ஆற்றுக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் குறைவாக செல்வதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லனை பாசன கண்காணிப்புக்குழு தலைவர் அருண் கல்லனையில் இருந்து ஆற்றுக் கரைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து வருகிறார்.


இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஆற்றுக் கரை வழியாக ஆய்வை தொடங்கிய ஆய்வுக்குழு செவ்வாய் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதந்தனர். ஆய்வுக்குழு வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ், ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினவாதி ஆகியோர் கறம்பக்காடு மேற்பனைக்காடு ஆற்றுக்கரையில் காத்திருந்தனர். ஆய்வுக்குழு வர இரவு ஆகும் என்பதால் காத்திருந்த மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அறந்தாங்கி சென்றனர்.


இந்த நிலையில் இரவு மேற்பனைக்காடு வந்த கண்காணிப்புக்குழு தலைவர் அருண் ஐ.ஏ.எஸ் டார்ச் லைட் வெளிச்சத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த ஆற்றில் சுமார் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடலாம் கரை பலமாக உள்ளது. பாதிப்பு ஏற்படாது. மேலும் மேட்டூருக்கு இப்போது தண்ணீர் உள்ளது போல தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்தால் கடைமடைப் பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் கொடுக்கலாம். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு தடங்களின்றி தண்ணீர் கிடைக்கும் என்றார். ஆய்வின் போது கல்லனை கோட்ட அதிகாரிகள் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT