Skip to main content

கல்லனை கால்வாய் கரை பாதுகாப்பை டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆய்வு செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

Published on 15/08/2018 | Edited on 15/08/2018
m

    

கல்லனை பாசன கண்காணிப்புக் குழு தலைவர் அருண் மேற்பனைக்காடு பகுதியில் ஆறு, ஆற்றுக்கரைகளை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு 3 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறந்தால் பாதிப்பு இருக்காது என்றார்.

 

    மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லனை வந்தடையும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் கல்லனையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லனை திறக்கப்பட்ட சில நாட்களில் தஞ்சாவூர் அருகில் உள்ள கல்விராயன்பேட்டையில் ஆற்றுக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் குறைவாக செல்வதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லனை பாசன கண்காணிப்புக்குழு தலைவர் அருண் கல்லனையில் இருந்து ஆற்றுக் கரைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து வருகிறார்.

 

mp


    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஆற்றுக் கரை வழியாக ஆய்வை தொடங்கிய ஆய்வுக்குழு செவ்வாய் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதந்தனர். ஆய்வுக்குழு வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ், ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினவாதி ஆகியோர் கறம்பக்காடு மேற்பனைக்காடு ஆற்றுக்கரையில் காத்திருந்தனர். ஆய்வுக்குழு வர இரவு ஆகும் என்பதால் காத்திருந்த மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அறந்தாங்கி சென்றனர்.

m


    இந்த நிலையில் இரவு மேற்பனைக்காடு வந்த கண்காணிப்புக்குழு தலைவர் அருண் ஐ.ஏ.எஸ் டார்ச் லைட் வெளிச்சத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த ஆற்றில் சுமார் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடலாம் கரை பலமாக உள்ளது. பாதிப்பு ஏற்படாது. மேலும் மேட்டூருக்கு இப்போது தண்ணீர் உள்ளது போல தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்தால் கடைமடைப் பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் கொடுக்கலாம். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு தடங்களின்றி தண்ணீர் கிடைக்கும் என்றார். ஆய்வின் போது கல்லனை கோட்ட அதிகாரிகள் இருந்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாசனத்திற்காக கல்லணை இன்று அமைச்சர்களால் திறந்துவைக்கப்பட்டது...!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Kallanai dam open's by TamilNadu ministers


கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்கான தண்ணீரை திறந்துவைத்தார். நேற்று முன்தினம் (14.06.2021) இரவு 11 மணியளவில் தண்ணீர் முக்கொம்பூர் அணையை வந்து சேர்ந்தது. வினாடிக்கு 892 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர்வந்து சேர்ந்தது.

 

இந்நிலையில் இன்று (16/6/2021) காலை 9:15 மணியளவில் தமிழ்நாடு அமைச்சர்களால் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. கல்லணை திறக்கப்பட்ட நிலையில் வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களிலும் குறுவை சாகுபடி பாசனத்திற்கான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

Kallanai dam open's by TamilNadu ministers

 

இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசு கொறடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

 

Next Story

கல்லணை கால்வாய் பாலம் உடைந்து அமுங்கியது...

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாயில் தண்ணீர் வரத் தொடங்கியது முதல் அடுத்தடுத்து கால்வாய் கரை உடைப்பு, மதகு உடைப்பு என்று தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பழமயான பாலம் ஒன்று உடைந்து அமுங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிப்பை சந்திக்க உள்ளனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடி கிழக்கு - மேற்பனைக்காட்டுக்கு இடையே கல்லணைக்கால்வாயில் பெரிய உடைப்பு ஏற்பட்டு 15 மணி நேரம் போராடி உடைப்பு சரி செய்யப்பட்டது. அடுத்து சில நாட்களில் மேற்பனைக்காடு வான்வழி தகவல் மையம் அருகே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் மதகு சுவர் உடைந்து மதகு தனியாக தொங்கியது. இவையெல்லாம் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தான் பல வருடங்களாக பழுதாகி தூண் உடைந்து காணப்பட்ட ஆயிங்குடி பாலம் திங்கள் கிழமை ஒருபக்கம் உடைந்து அமுங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உழவு பணிக்கு வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பால் பல கி.மீ. சுற்றி விவசாயகள் தங்கள் வயல்களுக்கு டிராக்டர் போன்ற வாகனங்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது.

 

பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) மெய்யநாதன், “இந்த பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறேன். ஆனால் நடடிக்கை எடுக்கவில்லை. இப்போது உடைந்து விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக புதிய பாலம் கட்ட நடவடக்கை எடுக்க வேண்டும்” என்றார்.