/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ips_15.jpg)
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து நிர்வாக வசதிக்காக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக பொன்னையாவும் நகராட்சி நிர்வாக இயக்குநராக சிவராசும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)