IAS Transfer of Officers; Tamil Nadu Government takes action

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், “சுற்றுலாத்துறையின் மேலாண்இயக்குநராக இருந்த சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய மேலாண்இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறை முதன்மை செயலாளராக இருந்த தீரஜ் குமார் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்கலா உஷா சுற்றுலாத்துறை மேலாண்இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய மேலாண்இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்”என தெரிவித்துள்ளார்.

Advertisment