Advertisment

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

IAS Officers Transfer  in Tamilnadu

Advertisment

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா கடந்த 11ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் இன்று, துறைச் செயலாளர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறைச் செயலாளராக மாற்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறைச் செயலாளராக மாற்றம், நிதித்துறைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் அமுதா, உள்துறைச் செயலாளராகவும், போக்குவரத்துத் துறைச் செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராகவும், சுற்றுலாத்துறைச் செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறைச் செயலாளராகவும், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறைச் செயலாளராக டாக்டர் பி.சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamilnadu ias
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe