IAS Officers Transfer

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘வேளாண்துறை ஆணையராக பணியாற்றி வந்த எஸ். சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மேலும் நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ். நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை ஆணையராக பணியாற்றி வந்த கே.எஸ். பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.