/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sagayam-ias_0.jpg)
தமிழகத்தில் சகாயம் என்றால் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. தன்னுடைய மாவட்ட ஆட்சியாளர் பணியில்நேர்மையாக அணுகு முறையாலும் மாநில முழுதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் இ.ஆ.ப அதிகாரியாவார்.
2016-ல் தமிழ் மக்களின் விருப்பத்துடன் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பட்டன. இப்படி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து, தமிழ் கையெழுத்து, விவசாயம், என சமூக அக்கறைக்கொண்ட இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பணிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் விருப்ப ஓய்வு கோரியுள்ளார்.
இவரின் நேர்மையைப் பாராட்டி சில மேடைகளில் முக்கிய பிரமுகர்களே உங்களைப் போன்றவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும். என கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
அதேநேரத்தில் சகாயம் அவர்களை நோக்கி இளைஞர்கள் வருகையும் தொடங்கி அவர்களும் அதே கோரிக்கைய முன் வைத்து, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கை அரசியலை நோக்கிய மக்கள் பாதையின் பயணமா எனும் விவாதமும் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)