
தமிழகத்தில் மேலும் 5 ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தென்மண்டல ஐ.ஜியாக அன்புவை தமிழக அரசு நியமித்துள்ளது. கோவை மாநகர காவல் ஆணையராக தீபக் எம்.தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குனராக பிரவீன்குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)