/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt 333_2.jpg)
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய அரசின் நடைமுறையைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. பி.எச்டி அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருந்தால் ரூபாய் 30,000 வழங்கப்படும். முதுகலை அல்லது டிப்ளமோ முடித்தவர்களுக்கு முறையே ரூபாய் 25,000, ரூபாய் 20,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us