தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான தமிழக அரசின் உத்தரவில், "விளையாட்டு, மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மற்றும் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன், மகளிர் உரிமைத்துறைக் கூடுதல் இயக்குநராக கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரக்கற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.