Skip to main content

''என் புள்ளைக்கு இன்னும் ஒரு செட் துணி எடுத்துத்தரல''-மீட்டர் வட்டி காரணமாக வீடியோ வெளியிட்டு விஷம் குடித்த இளைஞர்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

"I won't take one more set of clothes for my daughter" - the young man who published a video and got poisoned due to meter interest!

 

அண்மைக்காலமாகவே கந்துவட்டி கொடுமை, ஆன்லைன் ரம்மி, கடன் செயலி உள்ளிட்ட காரணங்களால் நிகழும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல் இது தொடர்பாக தற்கொலை செய்துகொள்பவர்கள் வீடியோ வெளியிட்டு தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்டு இறந்து போகிற சம்பவங்கள் அதிகம்.

 

இந்நிலையில் இளைஞர் ஒருவர் மீட்டர் வட்டி காரணமாக தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த வீடியோவில், ''தாலியில் இருந்து எல்லாத்தையும் வித்துதான் கடன காட்டினேன். ஆனால் மீட்டர் வட்டி கணக்குப்போட்டு  70 ஆயிரத்திற்கும் 85 ஆயிரமும், 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒருலட்சம் ரூபாயும், அந்த ஒருலட்சத்திற்கு  90 ஆயிரம் ரூபாயும் போட்டு, இப்போ ஐந்தாறு லட்சம் ரூபாய் கணக்கு சொல்றாங்க. ஆனா என்னால இத கட்ட முடியல.

 

எங்க அண்ணன் போய் அசல மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னான். ஆனா அவனும் கட்டற மாதிரி தெரில. என்ன கண்டுக்கல... என்ன கண்டுக்கிட்டா பரவால்ல. எங்க அப்பாவும் பார்த்துக்கல அம்மாவும்  பார்த்துக்கல. எங்க அண்ண கொஞ்சநாள் பார்த்துக்கிட்டான் அப்புறம் அவனும் விட்டுட்டான். என் மனைவியை கூட என்னால பார்த்துக்க முடில. வாரமானால் 2000 ரூபா சம்பளத்துக்கு போவேன் அத கடன கட்டிப்புட்டு போயிடுவேன். பொறந்ததுல இருந்து என் புள்ளைக்கு இன்னும் ஒரு செட் துணி எடுத்துத்தரல நானு. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கேன் நானு. இதுக்கு மேல எல்லாம் என்னால் இருக்க முடியாது'' என கண்ணீர் விட்டு அழ, அந்த நேரத்தில் 'அப்பா...' என குழந்தை மழலை மொழியில் அழைக்கும் ஒலி அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

 

மேலும் அழுதபடியே பேசிய அந்த இளைஞர் ''இதுக்குமேல என்னால வாழ முடியாது. முடிவு எடுத்துட்டேன். என் புள்ளைய, பொண்டாட்டிய பாத்துக்கோங்க. மறுபடியும் கடன்காரன் வந்து அவங்களை புடிச்சு உங்க அப்பன் கடன்வாங்கிட்டு போனான்னு ஏதாவது பண்ணுவாங்க'' என கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் விஷத்தை குடித்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்