Advertisment

ஆதாரமின்றி கமல் மீது புகார் கூறவில்லை: நடிகை கவுதமி

kamal & gowthami

Advertisment

எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேசமாட்டேன், ஆதாரமின்றி கமல் மீது புகார் கூறவில்லை என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த விஸ்வரூபம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை. இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுப்படுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தரவேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது என நடிகை கவுதமி கூறியிருந்தார்.

இந்நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ராஜ்கமல் நிறுவனம், தசாவதாரம்' படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன். 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார். இந்தப் படங்களில் கவுதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

Advertisment

திரைத்துறையைப் பொருத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விபரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கமல்ஹாசன் சம்பள பாக்கி வைத்திருப்பதாக புகார் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.

அதில், ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேசமாட்டேன். யாரிடமும் நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை, சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்தாலே போதும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

kamalhaasan gowthami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe