Advertisment

"எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட மாட்டேன்"- சசிகலா பேட்டி!

publive-image

பேரறிஞர் அண்ணாவின் 53- வது நினைவு நாளையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "அண்ணாவின் இதயக்கனியாக அண்ணா கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல இயக்கத்தைத் தொடங்கினார் புரட்சித்தலைவர். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தமிழகத்தில் கொண்டு வருவோம். யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எட்டு வருட காலத்தில் மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

Advertisment

நிச்சயம் அனைவரையும், அரவணைத்து செல்வோம், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எனது தலைமை செயல்படாது. மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Chennai pressmeet sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe