ponradha

Advertisment

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் முடிந்த பின் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், 1 மாத காலத்திற்கு பின்பாக கர்நாடகா மாநில முதல்வரை சந்தித்து, தமிழகத்தின் நிலை குறித்து தெளிவாக பேசுவதோடு, காவிரி நீர் சம்மந்தமான விஷயங்களையும் அவரோடு பேசுவேன். மேலும் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் அலசி ஆராயும் வகையில் அந்த சந்திப்பு நடைபெறும்.

Advertisment

தமிழகத்திற்கும், கர்நாடகா மாநிலத்திற்கும் நல்ல உறவு ஏற்படும் வகையில் அரசு உறுதியாக செயல்படும் என்றும் விவசாயிகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.