V. Gowthaman

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் கவுதமன் போராட்டம் நடத்தினார். இதுதொடர்பாக கடந்த 24ஆம் தேதி கவுதமன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இதையடுத்து அவர் இன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சட்டத்தின் வழியில் தொடர்ந்து போராடுவேன். எத்தனை முறை சிறை சென்றாலும் உயிர் இருக்கும் வரை போராடுவேன் என தெரிவித்தார்.

Advertisment

படம்: ஸ்டாலின்