Advertisment

’’தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடந்தால் தடுத்து நிறுத்துவோம்’’ - சீமான் பேச்சு

karaikkal

" திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காவேரி உரிமை மீட்பு நடைபயணம் செய்யப்போவது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு திமு,க காங்கிரஸ் வந்தால், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடுமா " என்று சீமான் காரைக்கால் துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு பிறகு கூறினார்.

Advertisment

நாகை மாவட்டம் நாகூருக்கும், காரைக்கால் வாஞ்சூருக்கும் இடையில் மார்க் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. துறைமுகத்தில் அனுமதிக்கு புறம்பாக நிலக்கரி, ரசாயனங்கள் இறக்குமதி செய்வதால், அதனை சுற்றியுள்ள பத்துக்கும் அதிகமான கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன.

Advertisment

அங்குள்ள மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர். அதோடு புரதான நாகூர் தர்காவும் பொலிவிழந்தே காணப்படுகிறது. மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குவதை தடை செய்யவேண்டும் என பல போராடங்களை அந்த பகுதிமக்கள் நடத்திவிட்டனர். தமிழ்நாடு - புதுச்சேரி இரு மாநில அரசுகளும் செவிசாய்க்கவில்லை.

நாகப்பட்டினத்திற்கு ஆய்வு செய்யவந்த தழிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு முன்னாள் எம்,எல்,ஏ நிஜாமுதின் நிலக்கரியால் மாலை அணிவித்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக முயன்று கைதானார்.

இந்தநிலையில் நாகை எம்,எல்,ஏ வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 6 ம் தேதி மாலை 5 மணிக்கு துறைமுகம் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான், இயக்குனர் கெளதமன், நாகை முன்னால் எம்,எல்,ஏ நிஜாமுதின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், " காவிரி விவகாரத்திற்காக ஸ்டாலின் நடைபயணம் போகப்போவது வேடிக்கையாக இருக்கு. தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரசும் ஆட்சிக்குவந்தால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடுமா. தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடுங்கள். ஆனால், விவசாயிகளின் வயிற்றில் விளையாடாதீர்கள் ஆகையால் IPLபோட்டி நடந்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடை செய்யவேண்டும், இல்லை என்றால் அடுத்தகட்டமாக கடல்வழி போராட்டம் நடத்துவோம்," என்றார்.

Seeman talk Tamil Nadu match IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe