வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, நேற்று முதல் தமிழகம் முழுவதும் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பொழிந்தது. இந்நிலையில், மழையின் பாதிப்புகளை பார்வையிடவும், களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை ஊக்கப்படுத்தவும் நேரடியாக களத்தில் குதித்தார் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு பகுதிகளுக்கு விசிட் அடித்த முதல்வர், தேவையான உத்தரவுகளையும் அதிகாரிகளுக்குப் பிறப்பித்தார். அத்துடன், களத்தில் இருந்த பணியாளர்களை சந்தித்து அவர்களிடம் விசாரித்ததோடு, உங்களுடன் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கைக் கொடுத்தார் ஸ்டாலின்.
இதனை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவு செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல்-நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்!
அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்.#NorthEastMonsoon… https://t.co/MopjVSbY6Upic.twitter.com/8hHCVlvbBf
— M.K.Stalin (@mkstalin) October 15, 2024