Advertisment

'ஓடிப்போனவரை பற்றி பேசமாட்டேன்' -காயத்ரி ரகுராம் காட்டம் 

 'I will not speak of a runaway' - Gayathri Raghuram Kattam

ஓடிப்போனவரைபற்றி பேச மாட்டேன் என அதிமுகவின்காயத்ரிரகுராம் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதுபரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

சென்னையில் நடைபெற்ற அதிமுகநிகழ்ச்சியில்கலந்து கொண்டகாயத்ரிரகுராம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,''அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக சொல்வது திமுகவின் சூழ்ச்சி, பாஜகவின் சூழ்ச்சி. எப்படியாவது அதிமுகவை அழிக்க வேண்டும். அதிமுகவின்விரிசல் விழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவும், திமுகவும்ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள். பாஜக, சசிகலா, ஓபிஎஸ், திமுக எல்லோரும் ஒன்றாக சேர்ந்து எப்படியாவது அதிமுகவைவரவிடாமல் செய்ய வேண்டும்என்பதற்காக திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் அது நடக்காது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகதான்வெற்றி பெறும்'' என்றார்.

Advertisment

தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் 'ஓடிப்போனவரைபற்றி நான் பேசமாட்டேன்; திரும்ப திரும்ப நீங்கள் கேட்டாலும் அதிமுக-பாஜக கூட்டணி அமையாது' என்றார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe