நான் மோடியைப்பார்த்தும் பயப்படமாட்டேன் இ.டியை பார்த்தும் பயப்படமாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Advertisment

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''நேற்று ஒரு பாஜக தலைவர் சொல்கிறார்அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் நடக்கப் போகிறது என்று. வாங்க என்னுடைய அட்ரஸ் வேண்டுமானால் கொடுக்கிறேன். உங்கள் இ.டி டிபார்ட்மெண்டுக்கு பயப்பட நான் யாரு... நான் கலைஞருடைய பேரன்;முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். நான் மோடியைப் பார்த்தும் பயப்படமாட்டேன் இ.டியை பார்த்தும்பயப்படமாட்டேன். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நான் சவால் விடுகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். சொல்லிட்டு வாங்க.

Advertisment

நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, ஐடி விங் எனப் பல அணிகள் இருக்கிறது. அதிமுகவிலும் பல்வேறு அணிகள் இருக்கிறது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி, சசிகலா அணி எனப் பல்வேறு அணிகள் இருக்கிறது. திமுகவில் மாவட்டத்திற்கு ஒரு கட்சி ஆபீஸ் இருக்கும். ஆனால் அதிமுகவிற்கு மட்டும்தான் மாவட்டத்திற்கு மூன்று கட்சி ஆபீஸ் இருக்கும். எந்த ஆபீசுக்கு போக வேண்டும் என யாருக்குமே தெரியாது. அதேபோல் பாஜகவிலும் நிறைய அணிகள் இருக்கிறது. தேர்தல் வரும் நேரத்திலெல்லாம் அந்த அணிகளை களமிறக்கி விடுவார்கள். அந்த அணிகளின் பெயர் சிபிஐ அணி, இ.டி அணி, ஐ.டி அணி. இந்த அணிகளையெல்லாம் இப்பொழுது அவர்கள் களமிறக்கி இருக்கிறார்கள்'' என்றார்.