Advertisment

'ஒரு மாதத்தில் திரும்பத் தந்து விடுகிறேன்' - கடிதம் எழுதிவைத்துவிட்டு கொள்ளை

 'I will give it back in a month' - robbery after writing a letter

'உங்கள் வீட்டில் கொள்ளையடித்த பணம், நகைகளை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சி ஐந்தாவது வார்டு பகுதியில் வசித்து வருபவர் சித்திரைச் செல்வன். சென்னையில் உள்ள தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக சித்திரைச் செல்வனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர். வீட்டின் சாவியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வி வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சித்திரச் செல்வனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

Advertisment

 'I will give it back in a month' - robbery after writing a letter

மேலும் அங்கு ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் 'என்னை மன்னித்து விடுங்கள் நான் இன்னும் ஒரு மாதத்தில் கொள்ளையடித்த பணம்,நகையைத்திரும்ப தந்து விடுகிறேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை' என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Investigation police Theft Robbery Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe