Advertisment

தன் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன்-கைதுக்கு பின் கருணாஸ்!

karu

Advertisment

காவல்துறை அதிகாரிகளை அதவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கருணாஸ், வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கூறியுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், போலீசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, என் ஜாதிக்காரன் மேல் கைவைதால் அவ்வளவுதான். நீங்க எல்லாம் போதை ஏற்றிக்கொண்டுதான் செய்வீங்க. நாங்க தூங்க எழுந்திருச்சதுமே செஞ்சிடுவோம். சட்டைதானே உங்களுக்கு அதிகாரம். அந்த சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோத தயாரா என காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் விடுத்திருந்தார். மேலும், முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். வேண்டுமென்றால் அவரிடமே கேட்டு பாருங்கள் என்று பேசினார்.

Advertisment

கருணாஸின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். நான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கருணாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரியை மிரட்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட 6 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது வீட்டிற்கே சென்று கருணாஸை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்தன்மீதானவழக்கை தான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கருணாஸ் கூறியுள்ளார்.

arrest karunas police
இதையும் படியுங்கள்
Subscribe