Published on 08/06/2021 | Edited on 08/06/2021

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிவருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 9 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது 10வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், " கட்சியை தலைமையேற்று வழிநடத்த நிச்சயம் வருவேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.