அண்மையில் சபரிமலைக்குச் சென்ற பாஜக இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலக்கல்மாவட்ட காவல்துறை எஸ்பி மீது வழக்கு தொடர்வது குறித்து யோசித்து முடிவெடுப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நகர எரிவாயு திட்டத்தின் கீழ்தமிழகத்தில் 10 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படவிருக்கிறது. இது தொடர்பான விழா கோவை கொடிசியா அரங்கில் நடந்தது. இந்த விழாவில்கலந்து கொண்ட பாஜக இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
நிலக்களில்தன்னைத் தடுத்த கேரள எஸ்பிஐயின்உடல்மொழி வேறுவிதமாக இருந்தது.அவர் மீது வழக்கு தொடுப்பது பற்றியோசித்துமுடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த அதிகாரிதன்னிடம் பேசும்போது, அப்பகுதியில்நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அதற்கு நான் எங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் பொழுது நீங்கள் செல்லும் வழியில் பாருங்கள் தெரியும் என்று கூறினார். அதன்பின் நிலச்சரிவினால் பிரச்சனைக்கு வந்தால் நீங்கள் பார்த்து கொள்வீர்களா? என்று வேறு விதமான உடல் மொழியில் கேட்டார். அதற்கு ஏ.என் ராதாகிருஷ்ணன் இப்படி பேசலாமா எனகேட்டார். இதுதான் அங்கு நடந்தது என்றார்.