publive-image

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், வட்டாட்சியர் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று (30/05/2022) மதியம் திருச்சி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களுக்காகத்தான் அரசு. மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.