வரும் சட்டமன்றத் தேர்தலில்அதிமுக-பாஜக கூட்டணிஉறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் எனஅதிமுகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல்தமிழகபாஜகதலைமையோ கூட்டணி முதல்வர் வேட்பாளரைபாஜக மேலிடத்தலைமைதான் அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, இன்னும் நான்கைந்து நாட்களில்இது தொடர்பான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிடும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்ததமிழகபாஜகதுணைத்தலைவர் அண்ணாமலை, "பாஜகமேலிடம் முடிவு செய்தால்தமிழகத்தின் எந்தத்தொகுதியிலும் போட்டியிடுவேன். கூட்டணிக் குழப்பத்தை ஏற்படுத்த யாரோ பாஜகவேட்பாளர் பட்டியல்எனஒரு பட்டியலைவெளியிட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை"என்றார்.