கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபன் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, நான் சினிமாவில் சாதித்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதிக்க புரட்சிகரமாக வருவேன். ஆனால் நான் அரசியலுக்கு எப்போது வருவேன் என்பதை காலம்தான் கூறும் என கூறினார்.
மேலும், தன்னுடைய ஒத்த செருப்பு படத்திற்கு அரசு சரியான அங்கிகாரத்தை தரவில்லை எனவும் கூறினார்.