
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்தசிறுவன், சிறுமி பெண் ஒருவரால் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு சிறார்களையும்போலீசார் மீட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த ஒன்பதாம் தேதி மூர்த்தி என்பவர் தனது மனைவி காமாட்சியின் பிரசவத்திற்காக வந்திருந்தார். இருவரும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிரசவத்திற்காக வந்திருந்த இருவரையும் உறவினர்கள் பார்த்துவிட்டுச் சொல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் மூர்த்தியின் அண்ணன் மற்றும் தம்பியின் மகன்மற்றும் மகள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்பொழுது அங்கு இருந்த லட்சுமி என்ற பெண் சுமார் ஏழு மணி அளவில் சிறுவன் சிறுமியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அப்பெண் குழந்தைகளின் உறவினர் என நினைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென இரண்டு குழந்தைகளையும் லட்சுமி கூட்டிச்சென்றுள்ளார். டீக்கடைக்குச் சென்ற மூவரும் வரவில்லை.
குழந்தைகளைக் காணவில்லை எனப் பெற்றோர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் மற்றும் வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் வாலாஜாபாத்தில் அஞ்சூர் பகுதியில் லட்சுமி வசித்து வருவது தெரியவர, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குழந்தைகள் அங்கு இருந்தனர். உடனடியாக போலீசார் சிறார்களை மீட்டனர். அதே வீட்டில் மேலும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அந்த குழந்தைகளின் பெற்றோர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)