தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம்அமமுக பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், 'அமமுகபற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன்" என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டமாகப் பேசினார்.