
கன்னட சினிமா உலகில் பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு (வயது 46) இன்று (29/10/2021) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், உயிர் பிரிந்தது.
புனித் ராஜ்குமார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநில முதலமைச்சர் பசவராஜ், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித் ராஜ்குமார் மறைவுக்குத்தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார் எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர். அவரது மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். புனித் ராஜ்குமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)