'நானே பயந்துவிட்டேன்; ரஜினி சார் பாவம்'-உதயநிதி பேச்சு

'I was frightened myself; Rajini Sir ' - Udayanidhi speech

'ரஜினிகாந்த் சார் பாவம். படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு செல்கிறார். அவரை வழிமறித்து மைக்கை நீட்டி துணை முதல்வர் குறித்து கேட்கிறார்கள்' என உதயநிதி பேசியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ''இன்று காலை ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்து போனை எடுத்து யூ-ட்யூப் பார்த்தேன். பார்த்தவுடன் நானே பயந்துவிட்டேன். என்ன தெரியுமா தலைப்பு இருந்தது'உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம்' அப்படின்னு இருந்தது. துணை முதலமைச்சர் குறித்த அறிவிப்புக்கான முழு உரிமையும் தமிழக முதல்வரிடம் தான் இருக்கிறது. ஆனால் ரோட்டில் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் மைக்கை நீட்டி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? உங்களுடைய ஒப்பினியன் என்ன என கேட்கிறார்கள். ரஜினிகாந்த் சார் பாவம். படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு செல்கிறார். அவரை வழிமறித்து மைக்கை நீட்டி கேட்கிறார்கள். அவரே சொல்லிவிட்டார் என்னிடம் அரசியல் கேள்வியில் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் அவர்கள் வைத்திருக்கக்கூடிய தலைப்பு 'உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம் என போட்டுள்ளார்கள்.

மிஸ்டு கால் கொடுத்தாலே பாஜகவில் சேரலாம் என்று விளம்பரம் எல்லாம் செய்தார்கள். ஆனால் பாசிஸ்டுகள் கடைசியில் தங்கள் சொந்தக்கால்களில் நிற்க முடியாமல் சந்திரபாபு நாயுடு காலிலும், நிதிஷ்குமார் காலையும் பிடித்துக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார்கள்'' என்றார்.

இதையும் படியுங்கள்
Subscribe