Advertisment

“நமக்கு நல்லது செய்யவே நேரம் இல்லை..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

I want to become TN no 1 as MM CM..

“நான் காலை, மாலை பார்க்காத முதலமைச்சராக இருப்பதை விட, ‘MM CM’ ஆக இருக்கவே விரும்புகிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மதுரையில் ஒவ்வொரு பகுதியிலும் பலதரப்பட்ட பணிகள் நடைபெறுகிறது. நேற்று நெல்லையில் பயணம் மேற்கொண்டேன்.

Advertisment

வழிநெடுகிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதில் இடம் பெற்ற வாசகம் ‘AM PM பார்க்காத CM’ என இருந்தது. அதாவது காலை மாலை பார்க்காத CM. ஆனால் நான் MM CM ஆகவே இருக்க விரும்புகிறேன். ‘மினிட் டு மினிட் சி.எம்’ ஆக இருந்து தமிழ்நாட்டை நம்பர் 1 ஆக, மாற்றவே விரும்புகிறேன்.

‘திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடன் பேசிக்கொண்டு உள்ளனர்’ என பழனிச்சாமி கூறுகிறார். அவருடைய எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவது இல்லை. இதில் திமுக எம்.எல்.ஏ க்கள் அவரிடம் பேசுகிறார்கள் என பொய்களை சொல்கிறார். நமக்கு நல்லது செய்யவே நேரம் இல்லை. இதில் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்வதை பற்றி நாம் கண்டுகொள்ளப் போவதில்லை" என கூறினார்.

madurai stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe