'' I want to become a movie star and a light in your house '' - Kamal campaign

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் சில மணிநேரம்உள்ள நிலையில் தீவிர வாக்குசேகரிப்பில்வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பேசும் பொழுது, ''சினிமா நட்சத்திரமாக இருக்கும் நான் உங்கள் வீட்டின் விளக்காக மாற வேண்டும். கோவை தெற்கு தொகுதியைஉதாரணமாக காட்டி அவர்களுக்கு அரசியல் கற்றுத்தர வேண்டும்'' என்றார்.