I thought the schoolboy had come to see me Dy cm udhayanidhi stalin speech

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா நடைபெற்றது. இந்த விழா வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (28.01.2025), கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை 3 மாதங்களுக்கு முன்பு இருந்தே பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், மாநில சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள். கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisment

ஒரு அரசியல்வாதி, அமைச்சர் பொதுவாக வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் தான் அவர் வலம் வருவார். இங்கு இருக்கின்ற அத்தனை பேருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஸ்கவுட் உடையில் (Scout Dress) தான் வந்திருந்தார். நான் கூட ஏதோ ஒரு ஸ்கூல் பையன் என்னை பார்க்க வந்திருக்கிறார் என்று நினைத்தேன். பிறகு அருகில் வந்தபிறகு தான் தெரிந்தது அவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வந்திருக்கிறார் என்று. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியோடு அவர் ஒன்றி போயிருக்கிறார். அவருக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்” எனப் பேசினார்.