Skip to main content

சைனாவில் டாக்டருக்கு படிக்க வச்சிடலாம்னு நினைச்சேன்.. கதறும் சுபஸ்ரீயின் தந்தை!

Published on 07/06/2018 | Edited on 07/06/2018
subashree


அரியலூர் அனிதா, விழுப்புரம் ப்ரதீபாவை தொடர்ந்து திருச்சி சுபஸ்ரீ என்று அடுத்தடுத்து இளம் மாணவிகள் நீட் தேர்வின் முடிவுகளில் உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழகம். 3 மாணவிகளுமே தங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிற நிலையில் தான் இந்த உலகமே தேவையில்லை என்கிற முடிவை எடுக்க வைத்திருக்கிறது. திருச்சி சுபஸ்ரீ தற்கொலையில் நீட் பத்தின சரியான புரிதல் இல்லாதால் அதை பயிற்சி நிறுவனங்கள் சொல்லிக் கொடுக்காததால் தான் மதிப்பெண் குறைவாக பெற்றதை தாங்கி கொள்ள முடியாமல் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்கிறார் சுபஸ்ரீயின் அப்பா கண்ணன்.

கண்ணனுக்கு சொந்த ஊர் துறையூர் அருகே உள்ள செல்லுலியூர். திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் உள்ளார். இவர் புதுக்கோட்டை டெப்போவின் பணிபுரிந்த காலத்தில் இருந்தே சுகாதாரதுறை விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். திருச்சியில் எல்.ஐ.சி காலனி, கே.கே.நகர் அடுத்த உத்தமர்சீலி என்று அடுத்து வீடுகளை மாற்றியும் கடைசியில் உத்தமர்சீலியில் வாடகை வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். இவருக்கு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரது மகள் சுபஸ்ரீ வயது17. சுபஸ்ரீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என சுபஸ்ரீயின் அம்மாவின் விருப்பம்.

அதனால் தான் திருச்சியில் 15 கல்வி நிறுவனங்களுக்கு மேல் வைத்திருக்கும் சௌடாம்பிகா கல்வி நிறுவனம் துறையூரில் நடத்தும் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். (இந்த பள்ளி நிர்வாகமே இந்த வருடம் முதல்முறையாக திருச்சியில் 3 இடங்களில் மிகப்பெரிய நீட் தேர்வுக்கான கோச்சிங் மையங்கள் நடத்தினார்கள். அதில் குறைந்தது 1500 மாணவர்கள் படித்தார்கள் இதில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற வில்லை என்பது வேறு விஷயம். இது குறித்து நக்கீரனில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.)
 

suba


சுபஸ்ரீ மரணம் குறித்து அவருடைய அப்பா கண்ணனிடம் பேசினோம், அவர் எப்படியும் டாக்டருக்கு படிக்க வச்சிடனும்னு சொல்லி திருச்சியில் உள்ள கேர் நீட் கோச்சிங் சென்டரில் 25 நாளில் படிக்க 20,000 கட்டி சேர்த்து விட்டிருந்தேன். ஆனா அவ தெரிந்த கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல் எல்லாத்துக்கும் பதில் எழுதியதால் தான் அவள் மிக குறைந்த மார்க் வாங்கியிருக்கா! இதை கூட அந்த பயிற்சி நிறுவனம் முழுமையா சொல்லி கொடுக்காமல் இருந்துள்ளது.

சரி விடு.. அடுத்த வருடம் படிக்கலாம் என்று நினைச்சேன். ஒரு வேலை நீட் தேர்ச்சி பெற்றால் சைனாவில் கொண்டு போய் 3 லட்சம் கட்டி டாக்டருக்கு படிக்க வைக்கலான்னு நினைச்சேன் அதனால் தான் அண்ணா யூனிவர்சிட்டியில் கூட அப்ளிகேசன் போடவில்லை. இப்படி 24 மார்க் வங்கினதால் அப்சட் ஆயிட்டா. நா அவளுடைய மனசை தேத்த இன்னைக்கு சென்னைக்கு கூட்டிகிட்டு போய் தெரிந்த ஒருத்தர் மூலம் தடவியல்துறையில் சேக்கலான்னு நினைச்சேன்.

நேற்று இரவு கால பைரவர் கோவிலில் விளக்கு போடும் பூஜைக்கு நானும் என் மனைவியும் போயிட்டு வீட்டுக்கு போனோம். அவ ரூமில் சாத்திகிட்டு இருந்தா சாப்பிட வர சொல்லியும் ரொம்ப நேரம் வராதால தட்டி எழுப்ப முயற்சி பண்ணின போது தான். உள்ளே பெட்டில் சேர் போட்டு அதில் நைலான் கயிறு போட்டு தற்கொலை பண்ணிகிட்டா ஒரு பத்து நிமிசத்துல அவளை கீழே இறக்கி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு போறதுக்குள்ள இறந்துவிட்டாள். அவ வாழ்க்கையும் கெடுத்து எங்களையும் பரிதவிக்க விட்டுட்டு போயிட்டா என்று கதறினார்.

சுபஸ்ரீ குறித்து அவர்கள் உறவினர்களிடம் பேசும் போது.. அவ எப்போதும் சுறு சுறுன்னு இருப்பா போன வாரம் கூட வெளில வண்டியில் போய் கிழே விழுந்து எழுந்து வந்துச்சாம். மார்க் குறைஞ்சதால அவுங்க அம்மா கொஞ்சம் கடுமையாக திட்டினால அவ வழக்கமாக இருக்கும் ரூம்க்குள் போய் கதவை சாத்திகிட்டா, அடிக்கடி இப்படி கோவிச்சுகிட்டு பண்ணுவான்னு நினைச்சுகிட்டு இருந்திருக்காங்க கடைசியில் அவா தற்கொலையே செஞ்சுகிட்டா என்று புலம்பினார்கள்.
 

sub


கண்ணன் வாடகை வீட்டில் இருப்பதால் சுபஸ்ரீயின் உடலை வீட்டுக்கு கொண்டு போக வீட்டுக்கு சொந்தகாரர் ஒத்துக்கொள்ளாதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் நேர ஓயாமரி சுடுகாட்டிற்கு கொண்டு வந்து அரை மணி நேரம் வைத்திருந்து கடைசியில் பெற்றோர் உறவினர்களின் கதறல்களுக்கு நடுவே எரிந்து சாம்பல் ஆனாள் சுபஸ்ரீ.

சுபஸ்ரீ அப்பாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரு திருப்பதியில் இருப்பதால் தொலைபேசியில் பேசி ஆறுதல் படுத்தினார். தினகரன் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சீனிவாசன், மனோகர், ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனையிலே வந்து மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கலை சுடுக்காட்டிற்கு வந்து மாலை அணிவித்தார். ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரின் மகள் நீட் தேர்வுக்கு பலி ஆனதற்கு ஆறுதல் சொல்லுவதற்கு எந்த அமைச்சர்களோ, எம்.பி.களோ, நிர்வாகிகளோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.