'I speak Hindi well ... don't say koothadi' - RK Suresh Emotional!

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் 'கூத்தாடி கூத்தாடி என்று சொல்லாதீர்கள்' என பேசியுள்ளார்.

Advertisment

அவர் பேசியதாவது, ''எல்லோராலும் சங்கர் சார் ஆகிட முடியாது.நான் பார்த்து வியந்த இயக்குநர்களில் அவரும் ஒருவர். ஒரு கன்டென்டை எப்படி எஸ்டாப்ளிஷ் பண்ணிக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்த மிகச் சிறந்த இயக்குநர் சங்கர் சார். அதனால்தான் அவர் அன்றிலிருந்து இன்றுவரை பெஸ்ட் டைரக்டர் என்றிருக்கிறார்.

Advertisment

வீட்டுக்குள்ளேயே பணத்தை போட்டு பூட்டி வைத்துவிட்டு திடீரென ஸ்ரீலங்கா மாதிரி ஒரு நாளைக்கு இந்தியா ஆயிடுச்சின்னா என்ன பண்ணுவீங்க. அதனால் 4 பேரு கொடுத்து சந்தோஷத்தை பார்க்கும் பொழுது அது ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்றைக்கு ஒடிடி என்ற ஒரு காலம் வந்து விட்டது. அது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. இதெல்லாம் நல்ல விஷயம் தான். கேஜிஎப் ஹிட்டானதோ, ஆர்ஆர்ஆர் ஹிட்டானதோ திரையரங்குகளுக்கு வேண்டுமானால் நல்ல விஷயமாக இருக்கலாமே தவிர ஒரு நாளு சின்ன படங்கள் எங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சின்ன படங்கள் ஹிட் செய்தது என்றால் முதலில் சந்தோசப்படுவது நான்தான்.

Advertisment

70 சதவிகிதம் ரீஜினல் படங்கள் வரவேண்டும் 30 சதவிகிதம் தான் அதர் லாங்குவேஜ் படங்கள் வரணும். இப்படிதான் பல மாநிலங்களில் இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் 70 சதவிகிதம் அதர் லாங்குவேஜ் படங்கள், டப்பிங் படங்கள் ரிலீசாகி விட்டது.

மார்வாடிகள் முன்னமாதிரி கிடையாது. முன்னாடியே நல்லவர்களாகத்தான் இருந்தார்கள். கரோனாவிற்கு பிறகு இன்னும் மனிதநேயம் உங்களுக்கு கூடியிருக்கிறது. நான் எப்படி இந்தி பேசுவேன் என்று கேட்டார்கள். நான் படிச்சதெல்லாம் மார்வாடி பசங்க கூட, இந்தியில் நல்லா பேசுவேன்.

நல்ல கன்டென்ட் இருக்கா அமேசான் இருக்கு, நல்ல கன்டென்ட் இருக்கா நெட்பிலிக்ஸ் இருக்கு. அதுக்கப்புறம் முடிஞ்சா நீங்க தியேட்டர் ரிலீஸ் பண்ணுங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் கூத்தாடி கூத்தாடி'னு சொல்லாதீங்க நாங்க எல்லாம் உங்களை மகிழ்விக்கிறவர்கள்'' என்றார்.