Advertisment

''உன்ன பார்க்க காத்திருக்கேன்னு சொன்னேன்... எங்க போன...'' - இளையராஜா உருக்கம்!

 '' I said I was waiting to see you ... where did you go ... '' -Ilayaraja melted!

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பிஉடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில்,அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பியின் மறைவுக்குவீடியோ மூலம் இரங்கலைத் தெரிவித்துள்ளார்இசையமைப்பாளர்இளையராஜா, அதில், "சீக்கிரம் எழுந்து வா நான் உன்ன பார்க்க காத்திருக்கேன்னுசொன்னேன். ஆனா நீ போயிட்ட.. எங்க போன...எனக்கு வாரத்தை வரவில்லை, பேச்சும் வரவில்லை.எல்லா துக்கத்திற்கும் அளவிருக்குஆனால் இந்த துக்கத்திற்குஅளவில்லை'' என்றார்.

Ilaiyaraaja spb video
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe