Advertisment

'புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றேன்'-திருமாவளவன் பேச்சு

nn

விடுதலைப் புலிகளிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மருதோவியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மானுடத்தின் தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை புலிகள் தலைவரின் அழைப்பு ஏற்று சென்றோம்.ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் ஜெய்பிரகாசம், இயக்குனர் புகழேந்தி தங்கராசு நான் உள்ளிட்ட ஐந்து பேர் சென்றோம். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒருநாள் அதிகாலை அண்ணன் சூசை அவர்களை சந்தித்து 'அங்கயற்கண்ணி' என்கின்ற பெயரில் ஓடுகின்ற படகில் கடலுக்குள் நெடுந்தூரம் பயணம் செய்தோம்.

Advertisment

அப்பொழுது அந்த கப்பலில் இருந்து துப்பாக்கியை எப்படி கையாள வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை பார்த்தோம், செய்தோம். நான் பொய் சொல்லவில்லை.மருது அவர்கள் சாட்சி என'' தெரிவித்துள்ளார்.

srilanka vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe