Skip to main content

வசந்த் அன் கோ விளம்பரத்தை மனதில் வைத்துதான் அந்த படத்தில் அந்த காட்சியை வைத்தேன்... கருணாஸ்

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

I put that scene in the film with the Vasant And co advertisement in mind ... Karunas

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் சென்னையில் காலமானார்.

எச்.வசந்தகுமார் மறைவு குறித்து நம்மிடம் பேசிய திருவாடானை எம்.எல்.ஏ.,வும், நடிகருமான கருணாஸ், வாழ்க்கையில் ஏழ்மையான இடத்தில் இருந்து கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். வி.ஜி.பி.,யில் அவர் பணியாற்றிய காலத்தில் இருந்தே எனக்கு அவரை தெரியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் அவருடைய வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஜெயிக்க வேண்டும்.

"உண்மை, உழைப்பு, உயர்வு" என வசந்த் அன் கோ விளம்பரத்தை மனதில் வைத்துதான் அம்பாசமுத்திரத்தில் அம்பானி என்ற படத்தில் நான் சேரில் அமர்ந்து சுற்றுவதுபோல் ஒரு காட்சி வைத்திருப்போம். வசந்த்குமார் அவர்களை மனதில் வைத்துதான் அந்தக் காட்சியை அமைத்தோம். சட்டமன்றத்தில் மிக எளிமையான நடையில் சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிக்கும்படி தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகளைப் பேசுவார். கோரிக்கைகளை முன் வைப்பார்.

அவரது பேச்சை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் அவர் மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசுவார். தன்னுடைய வாழ்க்கை அனுபவம் தன்னோடு முடிந்துவிடக் கூடாது. தன்னுடைய அனுபவம், பேச்சுகள் மூலமாக ஒரு வசந்தகுமார் உருவாக மாட்டானா என்று நினைப்பார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.