/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/44_92.jpg)
இந்தியாவில் உள்ள முதல்வர்களில் தூய்மை பணியாளர்கள் மதிக்கின்ற ஒரே முதல்வர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு தினமான இன்று(6.12.2024) தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள 300 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக 18 துறைகள் மூலம் சுமார் ரூ.2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/45_88.jpg)
இந்த விழா தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, “இந்தியாவில் உள்ள முதல்வர்களில் தூய்மை பணியாளர்கள் மதிக்கின்ற ஒரே முதல்வர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அதுபோல் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டுவிட்டு அதை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கூறி உடனே தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியும் கொடுத்து இருக்கிறார். மக்கள் மதிக்கக்கூடிய முதல்வருக்கெல்லாம் முதல்வராக திகழ்பவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்” என்று கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_80.jpg)
இந்த விழாவில் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டவர் அதுபோல் நலத்திட்ட வழங்கும் இந்த விழாவில் பொது மக்களும் பெருந்துறை திரளாகக் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)