Advertisment

இ.பெரியசாமியின் பிறந்தநாள் விழா...உற்சாகமாக கொண்டாடிய திமுக தொண்டர்கள்...!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமியின் பிறந்தநாள் விழாவை ஜனவரி 6-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Advertisment

i-periyasamy birthday celebration

இ.பெரி்யசாமியின் 68வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள், திமுக தொண்டர்கள் அனைவரும் கோவிந்தாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஜனவரி 6-ம் தேதி திங்கட்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவதற்காகவும், சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் இ.பெரியசாமி சென்னை செல்வதால், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கோவிந்தாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். அனைவரிடமும் வாழ்த்து பெற்ற அவர் மக்கள் பணியாற்ற அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Advertisment

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.பி.வி.கதிரவன் பிரமாண்டமான ரோஜா மாலையை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் திண்டுக்கல் நகர்மன்ற முன்னாள் தலைவர் நடராஜன் தலைமையில் தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவில் குருக்கள் கொண்டுவந்த மாலை அணிவிக்கப்பட்டு பரிவட்டம் கட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மதுரை தனசெல்வம், கும்மம்பட்டி விவேகானந்தன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் காணிக்கைசாமி, மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், சின்னாளபட்டி பேரூர் கழக முன்னாள் செயலாளர் தி.சு.அறிவழகன், பாறைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் வாஞ்சிநாதன், பாறைப்பட்டி முருகன், மாயி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Celebration birthday i periyasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe