Advertisment

எட்டு வருடமாக எட்டிப்பார்க்காததால் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை! திண்ணை பிரச்சாரத்தில் ஐ.பி.யிடம் குமுறிய மக்கள்!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் திமுக சார்பில் சௌந்திரபாண்டியனும், அதிமுக சார்பில் தேன்மொழியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையும் களமிறங்கியிருக்கிறார்கள்.

Advertisment

இதில் திமுக வேட்பாளரை ஆதரித்து கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் திமுக வேட்பாளரான சௌந்தரபாண்டியனை அழைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

Advertisment

ஆனால் இந்த இடைத்தேர்தல் மூலம் தொகுதியை திமுக கோட்டையாக உருவாக்க வேண்டும் என்ற முழு மூச்சுடன் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனிக்கவனம் செலுத்தி தனிமையில் தொகுதியில் வலம் வருகிறார்.

iperiyasami

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதிலேயும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு ஐபியின் சொந்த ஊர் என்பதால் இந்த வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள கோம்பபட்டிக்கு சென்ற ஐ.பி. பெரியசாமிக்கு அப்பகுதி மக்கள் சால்வை,மாலை போட்டு வரவேற்பு கொடுத்தனர்.

அப்பொழுது மாற்று கட்சியான அதிமுக,பாம.க,தேமுதிக கட்சியிலிரூந்து விலகி 300க்கு மேற்பட்டோர்ஐ.பி.முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்.

iperiyasami

அதன் பின் ஊர் திண்ணைக்கு வந்த ஐ.பி.யிடம்... கடந்த 8 வருடங்களாக எம்எல்ஏக்கள் இந்த பக்கமே வரவில்லை. அதுபோல் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் குடிக்க கூட தண்ணீர் இல்லை எனவேவைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டதை கண்ட ஐ.பி. உடனே உங்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறேன் நீங்கள் அவசியம் வரக்கூடிய தேர்தலில் பாராளுமன்றத்துக்கு வேலுச்சாமிக்கும், சட்டமன்றத்திற்கு சௌந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து கரட்டுப்பட்டிக்கு சென்ற திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஆதரவு கேட்டார்.

iperiyasami

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதன்பின் பேசிய ஐ பெரியசாமி... திமுகஆட்சியின்போது இப்பகுதியில் உள்ள முதியோர் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருந்தேன். அதை திடீரென நிறுத்தி விட்டனர். அதற்காக நான் சட்டமன்றத்தில் கூட போராடினேன் அப்படி இருந்தும் உங்களுக்கு இன்னும் முதியோர் உதவித்தொகை வரவில்லை. அடுத்து வரக்கூடிய ஸ்டாலின் ஆட்சி மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும். அதை சட்டமாகவே திமுக தலைமையிடம்சொல்லி அமுல்படுத்த இருக்கிறேன்.

அதுபோல் மத்திய அரசான மோடி அரசு மக்களை ஏமாற்றுவதற்காக வருஷத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறது. ஆனால் பிரதமராக வரக் கூடிய ராகுலோ மாதத்திற்கு 6000 ரூபாய் என வருஷத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்க இருக்கிறார். அதுபோல் விவசாய கடன்,கல்விக் கடன் தள்ளுபடி செய்ய இருக்கிறார்கள். அதுபோல் பிள்ளைகள் இனி டாக்டருக்கு படிக்க எந்த தடையும் இல்லாத அளவுக்குத நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். அதனால் வரக்கூடிய இந்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு வேலுச்சாமிக்கும், சட்டமன்றத்திற்கு சௌந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்குகள் மூலம் தான் நம்மை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்ப முடியும். அதுபோல் மாநிலத்திலுள்ள மக்களை மதிக்காத இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்புவதுதின் மூலம் கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார் எனக்கூறினார்.

மேலும் அதை தொடர்ந்து குளிர் பெட்டி, மீனாட்சிபுரம், பிச்சம்பட்டி, ஐயன் கோவில்பட்டி, கண்ணாபட்டி,செம்மடைப்பட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஐ.பி.புது பாணியில் தனிமையில் சென்று வாக்காள மக்களிடம் வேலுச்சாமிக்கும் சௌந்தர பாண்டியனுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்.

Election i periyasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe