
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் 'மோஷன் போஸ்டர்' வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்பொழுது'அண்ணாத்த... அண்ணாத்த...' என்ற படத்தின் அறிமுகப்பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை விவேகா எழுத, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலின் தொடக்கத்திலேயே இசை மேதை எஸ்.பி.பி. ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கம் எனக் குறிப்பிட்டு இப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடகர் எஸ்.பியின் கடைசி படலான அண்ணாத்த... அண்ணாத்த...' பாடல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்ட்ர் பக்கத்தில், '45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்' என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
Follow Us