Advertisment

பொறுப்பேற்ற ஐ.லியோனி..! இருக்கையில் அமரவைத்த அன்பில் மகேஷ்!!

I. Leoni takes over as President of Tamil Nadu Textbook  Department

பட்டிமன்ற பேச்சாளரும், திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்படுவதாகக் கடந்த வாரம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.இந்நிலையில், இன்று அவர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரை வரவேற்று பாடநூல் கழகத் தலைவர் இருக்கையில் அமரவைத்தார்.

Advertisment

dddd

Advertisment

இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகத் ஐ.லியோனி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

anbil mahesh Tamilnadu dpi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe