Skip to main content

'அவர் பத்திரமாய் போய் சேர்ந்திட எவ்வளவு விரதம் இருந்தேன் என எனக்குத்தான் தெரியும்''-நளினி பேட்டி

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

"I know how much I was fasting for him to go safely" - Nalini interview

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும்  விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, ''எல்லா நெஞ்சங்களும் என் மேல் அன்பு வைத்தார்கள். அதனால் தான் என்னால் வெளியே வர முடிந்தது. புகழேந்தி சார் இருக்கார். இவர் 20 வருஷம் என் பின்னாடியே சுத்திக்கொண்டிருந்தார். இன்னைக்கு வரைக்கும் அஞ்சு பைசா கேசுக்குன்னு யாருக்குமே பணம் கொடுத்தது கிடையாது. எந்த லாயருக்குமே நான் கொடுத்ததில்லை. ஆனால் எல்லோரும் இன்னைக்கும் எனக்காக வழக்கு விஷயத்தில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கு எனது நன்றி. இதில் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர்  இறந்து போயுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்ததா? அவர்கள் எப்படி இதை எதிர் கொண்டார்கள் என்பதையெல்லாம் நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.

 

என் வீட்டில் என் மகள், அப்பா, அம்மா எல்லோரும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள். இது உன்னுடைய தருணம் சந்தோசமா ஏத்துக்கோ என்று சொல்கிறார்கள். ஆனால் என்னால்தான் அது முடியவில்லை. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அது சகஜமான ஒரு விஷயம்தான். எல்லோருமே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு என்று நான் நினைக்கிறேன். ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்கிறதா? இல்லை. அதுபோல் எல்லோருக்கும் வேறு வேறு கருத்துக்கள் இருக்கும். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

 

மத்திய, மாநில அரசுகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருந்தவர். அவங்க டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள் ஏழு பேர் இறந்து விட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது அவர் எப்படி எனக்கு விடுதலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். முடியாது இல்லைங்களா, அதுதான்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் உங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினார்.  அதற்கு ''கண்டிப்பா நாங்க 30 வருடம் சிறையில் இருந்துட்டோமில்லையா அவங்களுக்கு அது திருப்தி இல்லையா? 32 வருடம் இருந்து விட்டோம் அவர்கள் திருப்தியாக இல்லையா'' என்றார்.

 

மற்றொரு செய்தியாளர் 'சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உண்டா?' என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த, நளினி, ''ஐயோ சாமி விட்ருங்க அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் கேசில் தான் ஏற்கனவே இருக்கிறேன்'' என்றார். அப்பொழுது செய்தியாளர் 'பிரியங்கா காந்தி உங்களை சிறையில் பார்த்திருந்தாரே' என்ற கேள்விக்கு,  ''ஆனாலும் கூட அவரை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் என்னை பார்த்துவிட்டு வெளியே சென்ற பிறகு எவ்வளவு பிரேயர் பண்ணினேன், எவ்வளவு விரதம் இருந்தேன் அவர்கள் பத்திரமாய் போய் சேர்ந்திட வேண்டும் என்று எனக்குத் தான் தெரியும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு; லஞ்சப் புகாரில் சிறைத்துறை டி.ஐ.ஜி! 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Bribery Complaint trichy prison DIG

திருச்சி மத்திய சிறையில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு படிப்பும், தொழிற்கல்வியும், உளவியல் ரீதியாக அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், இச்சிறைச்சாலைக்குள் 250 ஏக்கர் பரப்பளவிலுள்ள விவசாய நிலத்தில், இதற்கு முன்பு சிறை கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள், கைதிகளைக்கொண்டு விவசாயம் செய்து காய்கறிகள், கீரை வகைகளை விளைவித்து, விற்பனை மற்றும் உணவகம் என்று பெரிய அளவில் வர்த்தகமே செய்துவந்தனர்.

ஆனால் தற்போது சிறைத்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டாள், கைதிகளுக்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை வழங்காமல், அலுவலகத்திற்கு வருவதும், அலுவலக ரீதியான பணிகளைச் செய்வதுமாக மட்டுமே தனது கடமையை முடித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஜெயபாரதியும் கைதிகளின் நலனுக்காக பெரிய அளவில் எந்த பணிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இரண்டு பெண் அதிகாரிகளும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை எந்த செய்தியாளர்களின் அழைப்பையும் எடுப்பதில்லை.

டி.ஐ.ஜி. மட்டும் தன்னால் முடிந்தவரை சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 29 கிளைச் சிறைகளில், ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டுமென்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறையிலுள்ள கைதிகளின் உணவுக்காக அரசு வழங்கும் படிக்காசு, சிறைக்குள் கைதிகளுக்கு தனிப்பட்ட சலுகைகள் செய்து தருவதற்கு தனியாக ஒரு ரேட் என்று கொடிகட்டிப் பறக்கிறார் டி.ஐ.ஜி. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற விசாரணைக் கைதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

இந்நிலையில், தன்னை தஞ்சாவூர் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று உளவுப் பிரிவு முதல்நிலை தலைமைக் காவலர் பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இத்தகவலை பிரபாகரன் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், செந்தில்குமாரிடமிருந்து டி.ஐ.ஜி.க்கு 50 ஆயிரமும், அவருக்கு 40 ஆயிரமும் பெற்றுக்கொண்டு அவரை தஞ்சை சிறைக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ள செய்தி, காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "முற்றிலும் தவறான தகவல். சிறைக்குள் யாராவது கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும்'' என்று தன் மீதான லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.