Advertisment

''நாளை இரண்டு முக்கிய நிகழ்வுகள் இருக்கிறது''-ரஜினி சர்ப்ரைஸ் ட்வீட்!

publive-image

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யா உருவாக்கியுள்ள Hoote என்ற செயலியை நாளை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.

இரண்டாவது என்னுடைய மகள் சௌவுந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய Hoote என்கின்ற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள்மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் Hoote மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான Hoote ஆப்பை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்' என பதிவிட்டுள்ளார்.

twitter rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe