Advertisment

3 குழந்தைகளை விற்றுள்ளேன்... அமுதா பரபரப்பு வாக்குமூலம்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் நாமக்கல் அருகே ராசிபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகியுள்ளது.

Advertisment

 I have sold 3 children ... Amutha confession

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த ஆடியோவில் நர்ஸ் அமுதா, ‘’குழந்தை இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு எடுத்து தர்றேன்(குழந்தையை வாங்கித்தருகிறேன்). இதனால் நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன் 30 வருஷமா இப்படி செய்துக்கிட்டு வர்றேன். ஆண்டவன் புண்ணியத்துல இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. அப்பா- அம்மாவை பார்த்துதான் குழந்தையை எடுப்பேன். குழந்தை எடுக்கும்போது அவங்ககிட்ட கையெழுத்து வாங்கிப்பேன். அதெல்லாம் முறைப்படி செய்துகொடுத்துவிடுவேன். வெளியில கோர்ட் மூலமாக போனா லேட்டாகும். இப்போதைக்கு எடுத்து தர முடியாது.

குழந்தை கொழு கொழுன்னு ஆரோக்கியமாக இருக்குற மாதிரி எடுத்து தர்றேன். கருப்பு குழந்தையாக இருந்தால் 3.3 லட்சம் ரேட். குழந்தை கலரா இருந்தா 4.25 லட்சம் ரேட்.

மேற்கொண்டு, 70 ஆயிரம் கொடுத்தால் ஒரிஜினிலா குழந்தை உங்களுக்கு பிறந்தது மாதிரி நகராட்சியில் சான்றிதழ் வாங்கித்தந்துருவேன். ஒரு மாசத்துல ராசிபுரம் நகராட்சியிலேயே வாங்கித்தந்துருவேன். ராசிபுரத்தில் பிரசவம் ஆனமாதிரியும், பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது மாதிரியும், எங்க வீட்டில் தங்கியிந்து குழந்தை பெற்றது மாதிரியும் சான்றிதழ் வாங்கித்தந்துருவேன்’’என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ வாட்ஸ் -அப்பில் வெளியாகி தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமுதாவின் ஆடியோவினால் எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்குக் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டிருந்தார்.காலையிலேயே கைது செய்யப்பட்ட அமுதாவிடம்இது தொடர்பான விசாரணையை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு துவக்கினார். இந்த வழக்கில் அமுதாவிடம் நேரில் நடத்திய விசாரணையில்இதுவரை மூன்று குழந்தைகளை விற்றுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளை கொல்லிமலையிலும், ஒரு குழந்தையை சேலம் அன்னதானபட்டியிலும் வாங்கியதாக கூறியுள்ளார்.ஆனால் தான் 30 வருடங்களாக இந்த மாதிரி குழந்தைகளை விற்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக அந்த ஆடியோவில் அவர் கூறியிருந்த நிலையில் மேலும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் போலீசார். இந்த சம்பவம் தொடர்பாக அமுதாவின் கணவர் ரவிசந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

sold out police watsapp Salem omalur child
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe