I have nothing to do with Aruthra issue R.K. Suresh

சென்னை அமைந்தகரையைத்தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த மோசடியில் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருக்கும் நடிகர், திரைப்படத்தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகத்தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆர்.கே. சுரேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆஜராகாத ஆர்.கே. சுரேஷ் திடீரென தலைமறைவானார். இந்த சூழலில் வெளிநாட்டிலிருந்த ஆர்.கே. சுரேஷ் துபாயிலிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முன்பு இன்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.

Advertisment

இந்நிலையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் ஆஜரான ஆர்.கே. சுரேஷிடம் முதல் நாளில் நடைபெற்ற 7 மணி நேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர்.கே. சுரேஷ் பேசுகையில், “ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல் நலக் குறைவால் மனைவி ஐ.சி.யூ.வில் இருந்ததால் வெளிநாட்டில் இருந்து வந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நாளையும் ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். அதே சமயம் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷை நாளையும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.