'I have no place to park the car ... the policeman who slapped the employee ...' - Viral CCTV footage!

இரண்டு சக்கர வாகன காப்பகத்தில் வாகனத்தை நிறுத்த இடமில்லை எனக்கூறிய ஊழியரைக் காவலர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் இருசக்கர வாகன காப்பகம் ஒன்று உள்ளது. இந்த இருசக்கர வாகன காப்பகத்திற்கு நன்னிலையில் காவலராக பணிபுரியும் வினோத்குமார் என்பவர் வாகனத்தை நிறுத்தவந்துள்ளார். அப்பொழுது ஊழியர் ஒருவர் இங்கு வாகனம் நிறுத்த தற்பொழுது இடமில்லை. நீங்கள் வேறு எங்காவது வாகனத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் 'காவலரான எனக்கே இங்கு இடமில்லையா' என வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த ஊழியரை கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Advertisment

அங்கிருந்து சென்ற காவலர் வினோத் பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த காவலர் சுந்தரம் என்பவரை அழைத்துக்கொண்டுவந்து மீண்டும் தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை வைத்து இதுகுறித்து புகாரளிக்கப் போவதாக அந்த இருசக்கர வாகன காப்பகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.