Advertisment

''எனக்கு எண்டே கிடையாது; ஆனால் அந்த பக்கமே செல்லமாட்டேன்''-நடிகர் வடிவேலு

publive-image

Advertisment

இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையை அடுத்து நடிகர் வடிவேலு நடிக்க ரெட் கார்டுவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், ''என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது. இதுபோன்ற துன்பத்தை யாரும் சந்தித்திருக்க முடியாது. கரோனாவுக்கு முன் எனது பிரச்சனை எல்லாம் சாதாரணமாக சென்றுவிட்டது. மக்களை இன்னும் சந்தோசமாக சிரிக்க வைத்துவிட்டுதான் இந்த உயிர் இந்த பூமியை விட்டு செல்லும். நண்பன் விவேக் மறைவு நாட்டிற்கும், திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. விவேக்கின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாள் முதல் எனக்கு பிரகாசமான சூழல் அமைந்துள்ளது. தற்பொழுது எல்லாம் நன்றாகவே நடந்துவருகிறது'' என்றார்.

அதேபோல் தொடர்ந்து நடிப்பீர்களா என்றசெய்தியாளர்களின்கேள்விக்கு, அவரது பாணியில் ''எனக்கு எண்டே கிடையாது. இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ,தயாரிப்பிலோநடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன்'' என்றார்.

shankar tamil cinema vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe