Skip to main content

“மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நான் இம்முடிவை எடுத்துள்ளேன்” - டாஸ்மாக் ஊழியர்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

"I have made this decision because I am very depressed" - Tasmac employee

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் டாஸ்மாக் கடை எண்: 10138இல் விற்பனையாளராக நாகராஜன் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த வருடம் 5/10/2020 அன்று மேற்கண்ட கடைக்கு விற்பனையாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் வேலையில் சேர்ந்த நாள் முதல் “நீ உடல் ஊனமுற்றவன், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என இழிவாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்திருக்கின்றனர். மேலும், மேலதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார் மாற்றுத்திறனாளியான டாஸ்மாக் ஊழியர்.

 

இதனால் திங்கட்கிழமையன்று, (26.07.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விற்பனையாளர் நாகராஜன், “கடந்த வருடம் 05/10/2020 அன்று மேற்கண்ட கடைக்கு விற்பனையாளராக மாற்றம் செய்யப்பட்ட நாள் முதல், ‘நீ உடல் ஊனமுற்றவன். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.’ என தினசரி என்னைக் கேலி பேசியுள்ளார் கடையின் சூப்பர்வைசரான சரவணன். இதுகுறித்து மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோரிடம் தபாலிலும் தொலைபேசியிலும் புகாரளித்தேன்.

 

இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பணியும் செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நான், இம்முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் இருந்த காவல்துறையினரால் அவரது தீக்குளிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு, தொடர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார்.